சிம்பு ஜோடியாக ‘கெட்டவன்’ படத்தில் அறிமுகமாக இருந்தார் லேகா. படத்தின் ஒரு ஷெட்யூலில் அவர் நடித்தார். பின் அவரது நடிப்பு திருப்தி இல்லை எனக்...
தெலுங்கில் Ôவேதம்Õ படத்தில் அவர் நடித்திருந்தார். இதே படம் தமிழில் Ôவானம்Õ பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் சிம்பு ஹீரோ. இப்படத்தில் தெலுங்கில் நடித்த அதே வேடத்திலேயே நடிக்க லேகாவுக¢கு அழைப்பு சென்றதாம். ‘கெட்டவன்’ படத்திலிருந்து தன்னை சிம்பு நீக்கியதால், அவருடன் நடிக்க லேகா மறுத்ததாக கூறப்பட்டது.
இது பற்றி லேகாவிடம் கேட்டபோது, ‘சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்பதால் இப்படத்தை மறுத்தாக கூறுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நடித்த வேடத்திலேயே நடிக்க எனக்கு விருப்பம் கிடையாது’ என்றவர், அடுத்து இந்தியில் ‘பவர்’ படத்தில் அமிதாப் பச்சனின் மகளாக நடிப்பதாகவும் இதில் அஜய் தேவ்கன் தனக்கு ஜோடி என்றும் கூறினார்.
Comments
Post a Comment