‘கஜினி’, ‘வான்டட்’ (போக்கிரி) ஹிட்டுகளுக¢கு பின் தென்னிந்திய படங்களை பாலிவுட் தயாரிப்பாளர்கள் ரீமேக் செய்வது அதிகரித்து வருகிறது. அதிலும் ...
‘கஜினி’, ‘வான்டட்’ (போக்கிரி) ஹிட்டுகளுக¢கு பின் தென்னிந்திய படங்களை பாலிவுட் தயாரிப்பாளர்கள் ரீமேக் செய்வது அதிகரித்து வருகிறது. அதிலும் தெலுங்கு படங்களை அடுத்தடுத்து இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். தெலுங்கில் ஹிட்டான 'பொம்மரிலு’, இந்தியில் 'இட்ஸ் மை லைஃப்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ஹர்மான் பவேஜா, ஜெனிலியா நடிக்கின்றனர். 'ரெடிÕ படம் அதே பெயரில் தயாராகிறது. இதில் சல்மான் கான், அசின் நடித்து வருகின்றனர். அடுத்து 'கிக்’ படமும் ரீமேக் ஆகிறது. இதில் சல்மானுடன் சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளார்.
இதற்கிடையே ரவிதேஜா, ஸ்ரேயா நடித்து வெளியான 'டான் சீனு’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்குவதில் பாலிவுட் நடிகர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. சல்மான் கான், அக்ஷய் குமார், சைப் அலிகான் மூவரும் இந்த போட்டியில் உள்ளனர். ‘மகதீரா’, ‘அருந்ததி’ படங்களும் ரீமேக் பரிசீலனையில் உள்ளது. இந்த தெலுங்கு படங்கள் தவிர தமிழில் வெளியான ‘காக்க காக்க’, மலையாள ‘பாடிகார்ட்’ படங்களையும் இந்தியில் ரீமேக் செய்கின்றனர். ‘பக்கா ஹீரோயிசத்துடன் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படத்துக்கு இந்தியில் மவுசு கூடியுள்ளது. தெலுங்கில் இது போன்ற படங்கள் நிறைய வருவதால் அங்கிருந்து ரீமேக் செய்வது அதிகரித்துள்ளது’ என்கிறது இந்தி சினிமா வட்டாரம். Source: Dinakaran
Source: dinakaran-kolly
Comments
Post a Comment