57வது தேசிய சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக அமிதாப்பச்சன் தேர்வாகியுள்ளார். தமிழில் 'பசங்க' படத்துக்...
57வது தேசிய சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக அமிதாப்பச்சன் தேர்வாகியுள்ளார். தமிழில் 'பசங்க' படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. தேசிய விருது கிடைத்திருப்பது பற்றி இயக்குனர், வசனகர்த்தா பாண்டிராஜ் கூறியதாவது: 'பசங்க' படத்துக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால், வசனத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன். படத்தின் கதைக்கு கூட இவ்வளவு கஷ்டப்படவில்லை. குளத்தில் அமர்ந்துகொண்டு இரண்டு அப்பாக்கள் பேசும் வசனத்துக்கு அதிக நாள் எடுத்துக் கொண்டேன். அதற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புகழ் எல்லாம் படத்தை தயாரித்த சசிகுமாருக்குதான் சேரும். அவருக்கு என் நன்றி. இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.
Source: Dinakaran
Comments
Post a Comment