குமரியில் இருந்து சென்னைக்கு 'எந்திரன்' ரத யாத்திரை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினி ரசிகர்கள் எந்திரன் பட பிரசார பயணத்தை கன்னியாகுமரியில் இன்று தொடங்கினர். தாம்பரம் சென்று அங்கிருந்து திருப்பூரில் பயணத்தை முடிக்க ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் 'எந்திரன்'. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர். 'எந்திரன்' படம் வரும் 1-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். திருப்பூர் மாவட்ட மக்கள் பொதுநல இயக்கம் மற்றும் தமிழ்நாடு ரஜினி பொது தொழிலாளர் சங்கம் இணைந்து தமிழகம் முழுவதும் 'எந்திரன்' படத்தின் வாகன பிரசார பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டனர். அதன்படி, இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பிரசார வாகன பயணம் தொடங்கியது. காந்தி மண்டபம் அருகே பிரசார பயணத்தை ரஜினி மன்ற மக்கள் பொதுநல இயக்க தலைவர் முருகேஷ் தொடங்கி வைத்தார். ஒரு வாகனத்தில் கலை குழுவினர் சென்றனர். மற்றொரு திறந்த வாகனத்தில் ரஜினி மற்றும் ரோபோ வேடம் அணிந்த மூன்று பேர், ஆட்டம் ஆடி பாட்டு பாடியபடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். பிரசார பயணத்தில் மொத்தம் 5 வாகனங்கள் சென்றன. இவர்கள் நாகர்கோவில், திருச்செந்தூர், திருநெல்வேலி, ராஜபாளையம், திருமங்கலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், திண்டிவனம், தாம்பரம், திருவண்ணாமலை, ஈரோடு வழியாக அக்டோபர் 2-ம் தேதி திருப்பூரை சென்றடைகின்றனர். பிரசார பயண குழுவினருக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Source: Dinakaran

Comments

Most Recent