'பாணா காத்தாடி'யில் அதர்வா ஜோடியாக நடித்தவர் சமந்தா. ''ஸ்டெல்லா மேரி கல்லூரியில் டிகிரி முடித்ததும் நடிக்கப்போவதாக பெற்றோர...
'பாணா காத்தாடி'யில் அதர்வா ஜோடியாக நடித்தவர் சமந்தா. ''ஸ்டெல்லா மேரி கல்லூரியில் டிகிரி முடித்ததும் நடிக்கப்போவதாக பெற்றோரிடம் கூறினேன். எதிர்த்தார்கள். டைரக்டர் கவுதம் மேனன் அலுவலகத்திலிருந்து 3 முறை அழைப்பு வந்தது. அவரது ரசிகை என்ற முறையில் சந்திக்க சென்றேன். அப்போதுதான் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ஸ்கிரிப்ட்டை சொன்னார். பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன். இதில் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்ததற்கு காரணமும் கவுதம் மீதிருந்த நம்பிக்கைதான். இனியொருமுறை அப்படி நடிக்க மாட்டேன். முதலில் நடிகையாவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், படத்தை பார்த்தபிறகு ஓ.கே. சொல்லிவிட்டனர். 'பாணா காத்தாடி' படத்தை பிரபலபடுத்துவதற்காக நடந்த நிகழ்ச்சிக்கு வரவில்லையே' என்று சிலர் கேட்கிறார்கள். அந்த படம் பற்றி 2 நாளில் 50 முறைக்கு மேல் பேட்டி அளித்திருக்கிறேன். தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருந்ததால் வர இயலவில்லை. நான் ஒத்துழைப்பு தரவில்லை என்று தயாரிப்பாளர் என்னிடம் எந்த புகாரும் கூறவில்லை. இப்போதைக்கு தெலுங்கில் பிஸியாக இருக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட்டாக வந்தால் மட்டுமே தமிழில் நடிப்பேன்Õ' என்றார் சமந்தா.
Comments
Post a Comment