இசையமைப்பாளருக்கான அடையாளம் இந்த விருது :இளையராஜா பெருமிதம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது இளையராஜாவுக்கு 4வது முறையாக கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:
இதற்கு முன் மூன்று முறை தேசிய விருது பெற்றிருந்தபோதும் இந்த முறை சிறந்த பின்னணி இசைக்காக விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம் பின்னணி இசைதான் ஒரு இசையமைப்பாளருக்கான அடையாளம்.
'பழ்சிராஜா' படத்தை பொருத்தவரை முதலில் அதற்கு வழக்கமான முறையில்தான் இசை அமைத்தேன். ஆனால் பிரமாண்டமான அந்தப் படத்தின் காட்சிகளின் தரத்துக்கு அது பொருத்தமாக இல்லை என்று அதன் இயக்குனர் ஹரிஹரன் கருதினார். சிம்பொனி இசை சேர்த்தால் பொருத்தமா இருக்கும் என்று கூறி அதை அமைத்துக் காட்டியபோது அவர் பிரமாதம் என்று பாராட்டினார். தயாரிப்பாளரும் பட்ஜெட்டை பார்க்காமல் அதனை ஒப்புக் கொண்டார் அதனால்தான் இன்று விருது கிடைத்திருக்கிறது. தமிழ் தவிர்த்த பிற மொழிகளில்தான் இப்போது எனக்கு வாய்ப்புகள் அமைகிறது என்பதை ஒப்புக் கொள்ள மாட்டேன். என்னை பொருத்தவரை மொழி இரண்டாம் பட்சம்தான், இசைக்கு ஏது மொழி. இவ்வாறு இளையராஜா கூறினார்.


Source: Dinakaran

Comments

Most Recent