‘சிறந்த ஜோடி நயன்தாரா – பிரபு தேவா’ – என்ன கொடுமை சார் இது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் பிரபுதேவா, நயன்தாரா திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்கும் என்று தகவல் பரவி வரும் நிலையில் இந்த இருவரையும் அழைத்து சிறந்த ஜோடி (தம்பதி) விருதினை வழங்கியிருக்கிறார்கள் ஹைதராபாதில்! ஒரு ஆங்கில சினிமா பத்திரிகையின் விருது வழங்கும் விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படக் கலைஞர்களுக்கு இதில் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜும், சிறந்த நடிகையாக தமன்னாவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த படத்துக்கான விருதினை பசங்க படம் வென்றது. பிரபுதேவா, நயன்தாரா இருவருக்கும் திருமணமாகவில்லை என்பது ஒரு புறமிருக்க, இருவரும் இதுவரை எந்தப் படத்திலும் சேர்ந்து நடித்தது கூட இல்லை ஆனால் சிறந்த ஜோடி (தம்பதி) விருதினை வழங்கியது ஏன் என்று எவருக்கும் புரியவில்லை.
‘சிறந்த ஜோடி விருது நயன்தாரா – பிரபு தேவா’ : CLICK HERE – Prabhu Deva – Nayanthara Award Gallery
 


Source: Dinakaran

Comments

Most Recent