ரீமிக்ஸ் பாடலுக்காக தந்தை விட்டு அவரது மகனை தேர்வு செய்த பாலா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் அவன் இவன் மீண்டும் படுவேகம் பிடித்துள்ளது. அவன் இவனில் விஷால், ஆர்யா நடிக்கின்றனர். ஹீரோயின் ஜனனி ஐயர். விஷால் இந்தப் படத்தில் திருநங்கையாக நடிப்பதாக செய்திகள் கூறுகின்றன. அவன் இவனுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் ‌‌ரீமிக்ஸ் பாடல்கள் இடம்பெறுவதாகவும், இளையராஜாவிடம் ‌‌ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைக்க கேட்க முடியாது என்பதால் யுவனை பயன்படுத்துவதாகவும் பாலா கூறியுள்ளார். கடந்த ஞாயிறன்று ஒரு பாடல் ஒலிப்பதிவானது. இந்தப் பாடலைப் பாடியவர் விஜய் பிரகாஷ்.

Comments

Most Recent