இந்தியில் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூலை அள்ளிய 3 இடியட்ஸ் படம் தற்போது தமிழில் ரீமே செய்யப்பட உள்ளது. இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்க போவதாக ...
இந்தியில் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூலை அள்ளிய 3 இடியட்ஸ் படம் தற்போது தமிழில் ரீமே செய்யப்பட உள்ளது. இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்க போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது இப்படத்திற்கான வேலைகளில் ஷங்கர் இறங்கி உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் குறித்த ஆலோசனை இன்னும் ரகசியமாகவே நடைபெற்று வருகிறது. ஆனால் படத்திற்கு ஒளிப்பதிவை விண்ணைத் தாண்டி வருவாயா பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவிடம் ஒப்படைத்துள்ளார் ஷங்கர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். தனது ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானை இப்படத்தில் ஷங்கர் புக் செய்யவில்லை என்பது கூடுதல் தகவல். ஷங்கரின் பார்வை ஏ.ஆர்., பக்கமிருந்த ஹாரிஸ் பக்கம் திரும்பி இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.
Comments
Post a Comment