தமிழில் வெளியான 'தவசி' படம் கன்னடத்தில் 'மல்லிகார்ஜுனா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் விஜயகாந்த் கேரக்டரில் ரவிச்சந்தி...
தமிழில் வெளியான 'தவசி' படம் கன்னடத்தில் 'மல்லிகார்ஜுனா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் விஜயகாந்த் கேரக்டரில் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். சவுந்தர்யா கேரக்டரில் சதா நடிக்கிறார்.இதுபற்றி சதா கூறியதாவது:நான்கு வருடத்துக்கு பிறகு மீண்டும் கன்னட படத்தில் நடிக்கிறேன். சிவராஜ்குமாருடன் நான் நடித்துள்ள 'மிலாரி' முடிந்துவிட்டது. இதையடுத்து 'மல்லிகார்ஜுனா'வில் நடிக்கிறேன். நான் நடித்த 'மோகினி' சரியாக பேசப்படவில்லை. இதனால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். தமிழில் 'புலிவேஷம்' படத்தில் நடித்து வருகிறேன். இவ்வாறு சதா கூறினார்
Comments
Post a Comment