டைரக்டர் கவுதம் மேனன்.அளித்த பேட்டி: என் படங்களுக்கு பெயர் வைக்கும்போது சர்ச்சை ...
டைரக்டர் கவுதம் மேனன்.அளித்த பேட்டி: என் படங்களுக்கு பெயர் வைக்கும்போது சர்ச்சை எழுகிறது. எந்த படத்தையும் சினிமா துறைக்காக எடுக்கவில்லை. ரசிகர்களுக்காக எடுக்கிறேன். தலைப்பு வைப்பது என் இஷ்டம். அதன் வெற்றி, தோல்விக்கு பொறுப்பு ஏற்பது நான்தான். தற்போது இயக்கிவரும் படத்துக்கு 'நடுநிசி நாய்கள்' என்று டைட்டில் வைத்ததற்கு அதிருப்தி தெரிவிக்கிறார்கள். இரவு நேரத்தின் ஆபத்தை உணர்த்தும் வகையில் இந்த தலைப்பு வைத்தேன்.
ஹாரிஸ் ஜெயராஜ் எனது படங்களுக்கு இசை அமைத்து வந்தார். இப்போது ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்திருக்கிறேன். இதற்கு ஹாரிஸை ஒதுக்கிவிட்டேன் என்று அர்த்தமில்லை. இசையுலகில் ரகுமான் திறமையானவர். அவர் வியக்கத்தக்க மனிதர். 'அஜீத் படம் இயக்குவீர்களா?' என்கிறார்கள். அவரிடம் ஒரு வரி கதையை கூறினேன். ஸ்கிரிப்ட் தயாரிக்கச் சொன்னார். ஜூலையில் படத்தை தொடங்கலாம் என்றார். பிறகு டிசம்பர் மாதத்துக்கு கால்ஷீட் தள்ளித் தருவதாக கூறினார். இதற்கிடையில் நான் வேறு படங்களை ஒப்புக் கொண்டுவிட்டேன். கமலுடன் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் இணைந்தேன். அவரை பெரிதும் மதிக்கிறேன். அவர் கால்ஷீட்டுக்காக எத்தனை காலமானாலும் காத்திருப்பேன். 'காக்க காக்க' ஹிட்டுக்கு பிறகு ரஜினியிடம் ஒரு கதை கூறினேன். அவருடன் பணியாற்ற கனவுகளோடு காத்திருக்கிறேன்.
தமிழில் வெற்றி பெற்ற 'விண்ணை தாண்டி வருவாயா'வை இந்தியில் இயக்குகிறேன். 'காக்க காக்க' இந்தியில் ஜான் ஆப்ரகாம் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமானவராக தோன்றவில்லை. எந்த மொழியில் தயாரித்தாலும் குறிப்பிட்ட போலீஸ் கதாபாத்திரத்தை சூர்யா ஒருவரால் மட்டுமே நன்றாக செய்ய முடியும் என்பது என் கருத்து. இவ்வாறு கவுதம் மேனன் கூறினார்.
Comments
Post a Comment