சென்னையிலுள்ள தியேட்டர் ஒன்றுக்கு தமிழ்ப் படம் ஒன்றை பார்க்க பிரபு தேவா, நயன்தார...
சென்னையிலுள்ள தியேட்டர் ஒன்றுக்கு தமிழ்ப் படம் ஒன்றை பார்க்க பிரபு தேவா, நயன்தாரா ஜோடியாக வந்தனர். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, இந்த ஜோடியை ரசிகர்கள் பார்த்துவிட்டனர். உடனே முண்டியடித்து அனைவரும் ஓடி வர, பிரபு தேவா&நயன்தாரா ஷாக் ஆகியிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் கூட்டம் சேர்ந்துவிட்டது. ஆளாளுக்கு ஆட்டோகிராப் கேட்டிருக்கிறார்கள். சிலர் மொபைலில் படம் எடுப்பதில் பிசியாகிவிட்டனர். Ôஸாரி, கொஞ்சம் அவசரம்Õ என மட்டும் சொல்லிவிட்டு, நயனின் கையை பிடித்துக்கொண்டு சர்ரென பறந்துவிட்டாராம் பிரபு தேவா. இந்த சம்பவத்தால் அந்த தியேட்டர் முன் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.சந்தோஷ் சிவன் இயக்கும் ÔஉருமிÕ படத்தில் பிரபு தேவா நடிக்க உள்ளார். இதன் ஷூட்டிங் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மல்ஷெஜ்கட்ஸ் என்ற ஊரில் ஒரு மாதம் நடக்க உள்ளது. அப்போது பிரபு தேவாவுடன் மல்ஷெஜ்கட்சுக்கு போக பிளான் போட்டிருக்கிறாராம் நயன்தாரா.
Comments
Post a Comment