விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார் த்ரிஷா. இதில் பிரதீக் பப்பர் அவருக்கு ஜோடி. கவுதம் மேனன் இயக்குவதா...
விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார் த்ரிஷா. இதில் பிரதீக் பப்பர் அவருக்கு ஜோடி. கவுதம் மேனன் இயக்குவதால் சென்னையிலேயே இதன் ஷூட்டிங் நடக்கிறது. இரு தினங்களுக்கு முன் இப்படத்துக்கான ஷூட்டிங் சென்னையிலுள்ள ஒரு ஸ்டுடியோவில் நடப்பதாக இருந்தது. இதற்காக சரியான நேரத்துக்கு த்ரிஷா உட்பட படக்குழுவினர் வந்துவிட்டனர். ஆனால் பிரதீக் பப்பர் வரவில்லை. இதனால் ஷூட்டிங் திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை.
அன்றைய தினம் ஷூட்டிங்கை சீக்கிரம் முடித்துவிட்டு த்ரிஷா வெளியே செல்லும் திட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் டென்ஷனாக இருந்தாராம். ஒரு மணி நேரம் கழித்து செட்டுக்கு வந்தார் பிரதீக். தாமதத்துக்கு காரணம் கேட்டபோது, தனக்கு உடல் நிலை சரியில்லை என பிரதீக் சொன்னாராம். இதையடுத்து பட தயாரிப்பாளர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
இதனால் ஷூட்டிங் தொடங்கவில்லை. 'ஷூட்டிங்கை ரத்து செய்வதாக இருந்தால் சொல்லுங்கள். நான் கிளம்புகிறேன்' என த்ரிஷா தரப்பில் கேட்கப்பட்டதாம். ஆனால், 'சிறிது நேரத்தில் பிரதீக் வந்துவிடுவார். பொறுங்கள்' என படக்குழுவினர் கூறியுள்ளனர். மூன்று மணி நேரம் கழித்து பிரதீக் செட்டுக்கு திரும்பியிருக்கிறார். அதன் பின்பே ஷூட்டிங் தொடங்கியது. இதனால் மாலை வெகு நேரமாகியும் கவுதம், பேக்அப் சொல்லவில்லையாம். அன்றைய தினம் முழுவதும் த்ரிஷா மூடு அவுட்டில் இருந்ததாக பட டெக்னீஷியன் ஒருவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment