எக்ஸ்பிரஷன் மீடியா தயாரிக்கும் படம், 'நீயே என் காதலி'. சின்னி ஜெயந்த், உதய், பிரியா சர்மா நடிக்கின்றனர். சின்னி ஜெயந்த் இயக்குகிற...
எக்ஸ்பிரஷன் மீடியா தயாரிக்கும் படம், 'நீயே என் காதலி'. சின்னி ஜெயந்த், உதய், பிரியா சர்மா நடிக்கின்றனர். சின்னி ஜெயந்த் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. சூர்யா வெளியிட, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார். இதில் சின்னி ஜெயந்த் பேசியதாவது: இது என் 412&வது படம். நடிக்க வந்து 24 ஆண்டுகள் ஆகிறது. ரஜினியின் 'கை கொடுக்கும் கை' படத்தில் அறிமுகமானேன். முதலில் 'சின்னபுள்ள' படத்தை உருவாக்கினேன். 'மறுமலர்ச்சி' பாரதியை இயக்குனராகவும், பிறகு 'உனக்காக மட்டும்' படத்தில், இசையமைப்பாளர் சங்கர் (கணேஷ்) மகன் பிரபு சங்கரை இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்தேன். ரஜினியின் ரசிகனாக 'ஒருதடவை சொன்னா…' படத்தில் நடித்தேன். பிறகு 'கானல் நீர்'. இப்போது 'நீயே என் காதலி' படத்தை இயக்கி நடிக்கிறேன். பிரேம்குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளேன். காமெடி நடிகர் படம் இயக்குவது என்பது கஷ்டம். இந்த படத்தை கஷ்டப்பட்டு இயக்கியுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்துள்ளது.
Comments
Post a Comment