‘இச்’ படத்தையடுத்து பிரபு தேவா இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். த்ரிஷா நடித்த முத...
‘இச்’ படத்தையடுத்து பிரபு தேவா இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.
த்ரிஷா நடித்த முதல் படமான கட்டா மீட்டா சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் அவர் எதிர்ப்பார்த்த மாதிரி இந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை. சென்னையில் வெளியான சில தினங்களில் தூக்கப்பட்டுவிட்டது. வட இந்தியாவிலும் இந்தப் படம் தோல்வியைத் தழுவியுள்ளது.
ஆனாலும் மனம் தளரவில்லை த்ரிஷா. விதம் விதமாக கவர்ச்சி காட்டி தான் போஸ் கொடுத்துள்ள ஆல்பங்கள் தனக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்புகிறார்.
தமிழில் மன்மதன் அம்பு படம் மட்டுமே அவர் கைவசம் இருந்தது. இந்த நிலையில் விஷாலை வைத்து பிரபு தேவா புதிய படம் இயக்குவதைக் கேள்விப்பட்ட த்ரிஷா, நேராக பிரபு தேவாவையே போய்ப் பார்த்துள்ளார். அடுத்த நாளே, விஷால் ஜோடி நீதான் என்று சொல்லிவிட்டாராம் நடனப் புயல்!
Comments
Post a Comment