கமல் படத்தில் சொந்தக் குரலில் பேசுவதில் பெருமை-த்ரிஷா

http://thatstamil.oneindia.in/img/2010/08/14-trisha200.jpg

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு படத்தில் சொந்தக் குரலில் பேசியுள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார் த்ரிஷா.

காட்டா மீட்டா படத்துக்கு பின் திரிஷாவுக்கு தொடர்ந்து இந்திப்பட வாய்ப்புகள் வருகின்றன. அக்ஷய்குமாருடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறாராம். சல்மான்கான் ஜோடியாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாயின. ஆனால் அவை இன்னும் உறுதியாகவில்லை என்று த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் குறிப்பிடுகையில், “சல்மான்கானுடன் நடிக்க ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை. விரைவில் தெலுங்குப் படங்களில் நடிக்கவிருக்கிறேன். இதற்காக தெலுங்கு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

கமல் ஜோடியாக நடிக்கும் ‘மன்மதன் அம்பு’ படத்தின் படப்பிடிப்பு, வெளிநாடுகளில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இந்த படத்தில் திரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “படப்பிடிப்பிலேயே டப்பிங் பேச வைத்து பதிவு செய்து விடுகின்றனர். கமல் படத்தில் இதுபோன்று சொந்த குரலில் டப்பிங் பேசுவது பெருமையாக இருக்கிறது” என்றார்.

Comments

Most Recent