'வெண்ணிலா கபடி குழு' படத்தை தயாரித்த ஆனந்த் கே.சக்ரவர்த்தி, இமேஜின் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'நில் கவனி செல்லாதே' படத்தை இ...
'வெண்ணிலா கபடி குழு' படத்தை தயாரித்த ஆனந்த் கே.சக்ரவர்த்தி, இமேஜின் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'நில் கவனி செல்லாதே' படத்தை இயக்கி, ஹீரோவாக அறிமுகமாகிறார். தன்ஷிகா, லஷ்மி ஹீரோயின்கள். வி.செல்வகணேஷ் இசையில் நா.முத்துக்குமார், பிரான்சிஸ் கிருபா பாடல்கள் எழுதுகின்றனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. கடம் வித்வான் 'விக்கு' விநாயக்ராம் வெளியிட்டார். ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு, சுசீந்திரன், சசி, மதுமிதா, தன்ஷிகா, லஷ்மி, நகுலன், விஷ்ணு, அழகம் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நடிகர் ஜெகன் தொகுத்து வழங்கினார்.
Comments
Post a Comment