இயக்குநராகும் மனீஷா!

http://www.crazefm.com/images/singers/804.jpg

கல்யாணம் பண்ணிக்கொண்டு கொஞ்ச நாள் கணவருடன் இருந்த மனீஷா கொய்ராலாவுக்கு புதிய ஆசை பிறந்திருக்கிறது.

திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பதே அந்த ஆசை.

இப்போது ஹனிமூன் சமாச்சாரமெல்லாம் முடிந்து, நேபாளம் திரும்பியுள்ள மனீஷா கொய்ராலா, விரைவில் தமிழ்ப் படமான மாப்பிள்ளையில் தனுஷுக்கு மாமியாராக நடிக்கிறார்.

இந்தப் படம் முடிந்ததும் இந்தியில் சொந்தமாகப் படம் தயாரித்து இயக்கப் போகிறாராம். இதற்காகவே நியூயார்க்கில் டைரக்ஷன் கோர்ஸும் படித்துள்ளாராம் மனீஷா.

தனது முதல்படமே பரபரப்பாகப் பேசப்பட வேண்டும் என்பதால், அதற்கேற்ற கதைகளைத் தயார் செய்து வருகிறாராம்.

Comments

Most Recent