பெங்களூரின் புகழ்பெற்ற பாருக்கு நேற்று முன்தினம் ரஜினி வந்திருந்தார். ஆனால் மதுவருந்த அல்ல... அந்த பாரின் உரிமையாளரான தனது நண்பரை பார்த்து...
பெங்களூரின் புகழ்பெற்ற பாருக்கு நேற்று முன்தினம் ரஜினி வந்திருந்தார். ஆனால் மதுவருந்த அல்ல... அந்த பாரின் உரிமையாளரான தனது நண்பரை பார்த்துவிட்டுச் செல்ல.
ஒவ்வொரு முறை பெங்களூர் வரும்போதும், தனது மனதுக்கு நெருக்கமான நண்பர்களை மாறு வேடத்தில் போய் சந்தித்து இன்ப அதிர்ச்சி தருவது ரஜினியின் வழக்கம்.
இந்த முறை எந்திரன் இசைவெளியீட்டு விழாவுக்காக ஹைதராபாத் போன ரஜினி, அங்கிருந்து நேராக பெங்களூர் சென்றார்.
தனது ப்ளாட்டில் தங்கிய ரஜினி, பின்னர் மாலையில் கலாசிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள அஸ்வினி பார் - உணவகத்துக்குச் சென்றார். இந்த முறை அவர் மாறுவேடத்தில் செல்லவில்லை. எனவே திடீரென்று ரஜினியைப் பார்த்தவர்கள் அவரைச் சூழந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ரஜினியும் ரசிகர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, அந்த பாரின் உரிமையாளரும் தனது நெருங்கிய நண்பருமான கோபிநாத்துடன் பேசிக் கொண்டிந்தார்.
இதுகுறித்து கோபிநாத் கூறுகையில், "ரஜினிக்கு இந்த ஓட்டல் உணவு மிகவும் பிடிக்கும். ஆனால் சமீப காலமாக அவர் வரவே இல்லை. எனவே இங்கு ஒரு முறை வரவேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதை மறக்காத ரஜினி என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்றார். பணம், புகழ், அந்தஸ்தெல்லாம் பார்க்காத மனிதர் அவர். நட்புக்காக எதையும் செய்வார்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

Comments
Post a Comment