எண்பதுகளின் இறுதியில் கமல்ஹாஸனால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை மய்யம். அவரது நற்பணி இயக்கத்துக்காக இந்தப் பத்திரிகை நடத்தப்பட்டது. தரமான இல...
எண்பதுகளின் இறுதியில் கமல்ஹாஸனால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை மய்யம். அவரது நற்பணி இயக்கத்துக்காக இந்தப் பத்திரிகை நடத்தப்பட்டது.
தரமான இலக்கிய இதழாக பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்தப் பத்திரிகையை கமல் நடத்தவில்லை. திடீரென்று ஒருநாள் மூடப்பட்டுவிட்டது.
அதன்பிறகு பல மேடைகள், பிரஸ் மீட்டுகளில் இந்தப் பத்திரிகையை மீண்டும் துவங்கப் போவதாகக் கூறி வந்தார் கமல்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் மய்யம் பத்திரிகையை முதலில் மின்னிதழாகவும் பின்னர் அச்சு இதழாகவும் நடத்தப் போவதாக அறிவித்து ஆட்களையும் நியமித்தார் கமல்.
முக்கிய எழுத்தாளர்கள், சாதனையாளர்களை நேரில் சந்தித்து பேட்டிகளும் எடுத்தனர்.
ஆனால் இந்தப் பணிகள் ஒரு மாதம் மட்டுமே நடந்தது. இப்போது அனைவருக்கும் இரண்டுமாதச் சம்பளம் கொடுத்து ‘அனுப்பிவிட்டனர்’. ஆக இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்டுவிட்டது மய்யம்.
Comments
Post a Comment