இந்திரா இன்னோவேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'துரோகி'. இதை மணிரத்னம் உதவியாளர் சுதா கே.பிரசாத் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட...
இந்திரா இன்னோவேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'துரோகி'. இதை மணிரத்னம் உதவியாளர் சுதா கே.பிரசாத் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், இளங்கோவன் வெளியிட, இசை அமைப்பாளர் செல்வ கணேஷ் பெற்றுக் கொண்டார். விழாவில் படத்தின் ஹீரோ விஷ்ணு, ஹீரோயின்கள் பூனம் பஜ்வா, பூர்ணா, ஒளிப்பதிவாளர் அல்போன்ஸ் ராய் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இயக்குனர் சுதா நிருபர்களிடம் கூறியதாவது:
பெண் இயக்குனர்கள் என்றாலே மென்மையான கதையைத்தான் இயக்க வேண்டுமா என்ன? அப்படி ஒரு இமேஜை உடைப்பதற்காகத்தான் ஆக்ஷன் படத்தை இயக்கி உள்ளேன். உயிருக்கு உயிரான இரு நண்பர்கள் உயிரெடுக்கத் துடிக்கும் விரோதிகளாக மாறுகிறார்கள். இதற்கு காரணமான துரோகி யார் என்பதுதான் கதை. வடசென்னை பகுதியின் இருண்ட பிரதேசக் கதை. எனக்கு எப்போதுமே ஆக்ஷன் படங்கள்தான் பிடிக்கும். அதனால்தான் ஆக்ஷன் படத்தை எடுக்கிறேன். சண்டை, சேசிங், கிளாமர், ரொமான்ஸ். குத்துப்பாட்டு அனைத்தும் படத்தில் இருக்கும். இவ்வாறு சுதா கூறினார்.
Comments
Post a Comment