சென்னை, ஆக.22: என்னுடைய பேரன் திரைப்படத் துறையில் ஈடுபடக் கூடாதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். திரைப்படத் துறையினருக்கு...
சென்னை, ஆக.22: என்னுடைய பேரன் திரைப்படத் துறையில் ஈடுபடக் கூடாதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைப்படத் துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. இந்தக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:
இந்த விழாவுக்கு வரும் நேரத்தில், காலைப் பத்திரிகையில் விகடத் துணுக்கு பார்த்தேன். அதில், கலைஞர் வரலாற்றிலேயே முதல் முறையாக... கலைஞர் கதை வசனத்தில்... கலைஞர் பேரன் தயாரிப்பில்... கலைஞர் பேரன் இயக்கத்தில்... கலைஞர் பேரன் நடித்த... புத்தம் புதிய திரைக்காவியம்... கலைஞர் டி.வி.வியில் மிக விரைவில்! காணத்தவறாதீர்கள் என்று விளம்பரம் போன்ற துணுக்கு.
"அடடே...!' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? பேரன், பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசு இருந்து அவர்கள் இந்தத் துறையிலே ஈடுபட்டதே கிடையாதா?
மகத்தான நடிகர் பிருத்வி ராஜ் கபூரின் மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்தானே? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசி கபூர், அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரணதீப் கபூர் - இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா?
கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலா நிதி, தயா நிதி, அருள் நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. இதற்காகப் பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக்கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால், உண்மையை நீங்கள்தான் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பிருதிவிராஜ் கபூரின் பேரன், கொள்ளுப் பேரன், பேத்தி வரை கலைத்துறையில் இருக்கலாம். சிவாஜி கணேசனின் மகன் பிரபு இருக்கலாம். அவரது மகன் துஷ்யந்த் இருக்கலாம். ஆனால், கருணாநிதி மட்டும் இருக்கக் கூடாது.
ஏனென்றால், கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். அதை ஒழிக்க வேண்டும், வீழ்த்த வேண்டும் என்ற குறுகிய நோக்கமே அவர்களுக்கு உள்ளது. அதைத் தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்துக்கு வரும்போது பிருதிவிராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும்.
அதேபோல், ரஜினிகாந்தின் மருமகனும் நடிப்பதால் அவருடைய பெயரும் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும். ரஜினி முழுநேர அரசியலில் இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள் என்றார் முதல்வர் கருணாநிதி.

Comments
Post a Comment