சல்மான் கானுடன் லக் படத்தில் நடித்தவர் சினேகா உல்லால். இந்தியில் சில படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்த இவர், இப்போது சிம்ப...
சல்மான் கானுடன் லக் படத்தில் நடித்தவர் சினேகா உல்லால். இந்தியில் சில படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்த இவர், இப்போது சிம்பு ஜோடியாக வானம் படத்தில் நடிக்கிறார்.அவர் கூறியதாவது:நான் நடித்த தெலுங்கு படம் தமிழில் என்னை தெரியுமா பெயரில் வெளிவந்தது. இதில் சிம்பு ஒரு பாடல் பாடியிருந்தார். அப்போதே அவரை தெரியும். இப்போது வானம் படத்தில் அவருடன் நடிப்பது சந்தோஷம். நாங்கள் நல்ல நண்பர்களாக உள்ளோம். எங்களை பற்றி வரும் கிசு கிசுவால் கவலை இல்லை. லக் படத்தில் நடித்தபோது சல்மான் கானுடனும் இணைத்து பேசினார்கள். இப்போதைக்கு நான் காதலில் விழவில்லை. காதல் வயப்பட்டு, எனது பெற்றோருக்கு தொல்லை தரவும் விரும்பவில்லை. அடுத்து, இந்தி படத்தில் நடிக்கிறேன். இடையில் ஜெயம் ரவி ஜோடியாக அமீர் படத்தில் நடிக்க கேட்டார்கள். கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை.இவ்வாறு சினேகா உல்லால் கூறினார்.
Comments
Post a Comment