''படத்தின் கேரக்டரை புரிந்துகொள்ளாமல் நடித்ததாகக் கூறி, கன்னத்தில் அறைந்தார் டைரக்டர்'' என்ற...
''படத்தின் கேரக்டரை புரிந்துகொள்ளாமல் நடித்ததாகக் கூறி, கன்னத்தில் அறைந்தார் டைரக்டர்'' என்று புதுமுக நடிகை கதறி அழுத சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'பூமணி', 'பூந்தோட்டம்' போன்ற படங்களை இயக்கிய மு.களஞ்சியம் 'கருங்காலி' என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். சீனிவாசன் ஹீரோ. அஞ்சலி, சுனிதா வர்மா, அஸ்மிதா ஆகிய 3 பேர் ஹீரோயின்கள். இதில் டைரக்டரிடம் கன்னத்தில் அறை வாங்கியதாகக் கூறி பரபரப்பு கிளப்பிய அஸ்மிதா கூறியது:
'கருங்காலி' பட ஹீரோயின் தேர்வுக்கு போனேன். 'ஸ்டிராங்கான கேரக்டர் உன்னால் பண்ண முடியுமா?' என்று டைரக்டர் கேட்டார். அதற்கு, 'செய்கிறேன்' என்றேன். 'உன்னைப் பார்த்தால் எனக்கு நம்பிக்கை வரவில்லையே?' என்று கூறி என்னை அனுப்பி விட்டார். அதுமட்டுமின்றி, 'பார்க்க சுமாராகத்தான் இருக்கிறாய். நீ கலராக இருந்தாலும் முகம் பூரா கறுப்பு தடவப் போறேன். அதுக்கு இஷ்டம் இல்லேன்னா இப்பவே சொல்லிடு..' என்றார். தயாரிப்பாளர் செய்த சிபாரிசினால்தான் எனக்கு ஹீரோயின் அந்தஸ்து கிடைத்தது.
முதலில் சிரிப்பு.. அடுத்த ஷாட்டிலேயே அழுகை என எக்ஸ்பிரஷன் காட்ட வேண்டிய காட்சி. நான் கொஞ்சம் சொதப்பி விட்டேன். 'நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கேரக்டரை சொதப்புகிறாயே..' என்று கத்தியபடி கன்னத்தில் அறைந்துவிட்டார் டைரக்டர். எனக்கு அவமானம் தாங்கவில்லை. ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதேன். அதை அப்போதே மறந்து விட்டேன். நான் சொன்னதை வைத்து இப்போது பரபரப்பு கிளப்புகிறார்கள்.
இதுபற்றி டைரக்டர் களஞ்சியத்திடம் கேட்டபோது, ''சில நேரங்களில் படத்துக்காக மெனக்கெட வேண்டி இருப்பதால் சைக்கோ போல நடந்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். திட்டியது, கன்னத்தில் லேசாக அடித்தது உண்மைதான். அது தொழிலுடன் சேர்ந்த ஒரு கண்டிப்பு. அவ்வளவுதான்'' என்று முடித்துக் கொண்டார்.
Comments
Post a Comment