இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும், அவர் படம் வெளியாகும் தினமே திரையுலகின் திருவிழா என்பார்கள் கோடம்பாக்கத்தில். இவையெல்லாம்...
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும், அவர் படம் வெளியாகும் தினமே திரையுலகின் திருவிழா என்பார்கள் கோடம்பாக்கத்தில். இவையெல்லாம் ஒரே ஒரு மனிதருக்காக… அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி… தமிழ் திரையுலகின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.
ஆடியோ விற்பனையில் இனி வேறு எந்தப் படமாவது இந்த சாதனையில் பாதியையாவது நெருங்குமா என்று கேட்கும் அளவுக்கு மிரள வைத்திருக்கிறது எந்திரன். இதுவரை நான்கு முறை மறுபதிப்பை வெளியிட்டுள்ளது திங்க் மியூசிக் நிறுவனம். எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையமைத்திருந்தாலும் சில ஆயிரம் சிடிக்கள் விற்றாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் இன்று ஆடியோ மார்க்கெட்டில் நிலவுகிறது.
ஆனால் ரஜினியின் எந்திரன் சிடிக்களோ வெளியான சில தினங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாக ரேடியோ மார்க்கெட் விற்பனையாளர்கள் வியக்கிறார்கள். எந்திரனின் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பான ரோபோவின் இசை விற்பனையும் அமோகமாக உள்ளது. எந்திரனின் இந்த சாதனையை வேறு யாராலும் நிகழ்த்த முடியாது” என்கிறார் விநியோகஸ்தர் சங்கப் பிரதிநிதி ஒருவர்.
Comments
Post a Comment