ஜெனிலியாவும், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் திருமணம் செய்துகொண்டதாக வந்த தகவலை அடுத...
ஜெனிலியாவும், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் திருமணம் செய்துகொண்டதாக வந்த தகவலை அடுத்து ஷாக் ஆகியுள்ளார் ஜெனிலியா. ரிதேஷும் ஜெனியாவும் காதலித்து வருகின்றனர். இருவருவே அதை மறுத்து வந்தாலும் விழாக்களுக்கு இருவரும் ஒன்றாக வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் செய்திகள் வெளியானது. இதுபற்றி ஜெனிலியா கூறியதாவது:
நான் யாரையும் திருமணம் செய்யவில்லை. நான் ரிதேசை காதலிக்கிறேனா இல்லையா என்பது தனிப்பட்ட விஷயம். அதை விவரிக்க விரும்பவில்லை. நடிகைகளுக்கு கிசு கிசு புதிதில்லை என்றாலும், திருமணம் என்ற செய்தி வெளியானதும் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. நான் திருமணம் செய்தால் அதை ரகசியமாக செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்தளவுக்கு கோழையும் அல்ல. எல்லோருக்கும் தெரியபடுத்திவிட்டே செய்வேன். இவ்வாறு ஜெனிலியா கூறினார்.
Comments
Post a Comment