மனைவியை கொடுமை படுத்தியதாக காவ்யா மாதவன் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த நிஷால் சந்திராவுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் நடிகை காவ்யா மாதவன் கடந்த சில தினங்களுக்கு முன் விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நிஷால்சந்திராவுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தன்னை நிஷால்சந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமை படுத்தியதாக எர்ணாகுளம் மாவட்ட குற்றவியல் மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் காவ்யா மாதவன் வழக்கு தொடர்ந¢தார். இதையடுத்து நிஷால் சந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Comments

Most Recent