ஒருவழியாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக்கிவிட்டார் இயக்குநர் ராஜேஷ். ஜீவாவை வைத்து சிவா மனசுல சக்தி என்ற படத்தை இயக்கியவர் ராஜேஷ். தற்போது ஆர...
ஒருவழியாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக்கிவிட்டார் இயக்குநர் ராஜேஷ்.
ஜீவாவை வைத்து சிவா மனசுல சக்தி என்ற படத்தை இயக்கியவர் ராஜேஷ். தற்போது ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ரெட்ஜெயன்ட் மூவீஸ்தான் வெளியிடுகிறது.
ஒரு நாள் உதயநிதி ஸ்டாலினிடம் ஒரு ஸ்கிரிப்டை கூறியுள்ளார் இயக்குநர் ராஜேஷ். கதை மிகவும் பிடித்துவிட, உடனடியாக ஒப்புக் கொண்டாராம் உதயநிதி.
கேஎஸ் ரவிக்குமார் போன்ற பெரிய இயக்குநர்கள் கேட்டும் நடிக்கத் தயங்கி வந்த உதயநிதியை எப்படி மடக்கினீர்கள்? என்று ராஜேஷிடம் கேட்டபோது,
"உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களை கவர்ந்துள்ளார். அவரை வைத்து படம் எடுக்க விரும்பினேன். அதற்கான கதையையும் தயார் செய்தேன். உதயநிதி ஸ்டாலினை சந்தித்து கதையை சொன்னேன். அவருக்கு அந்தக் கதை ரொம்பப் பிடித்தது. நடிக்கவும் சம்மதித்தார். இது முழுக்க முழுக்க காதல் கதையாகும். "பாஸ் என்கிற பாஸ்கரன்" படம் ரிலீசானதும் பட வேலைகளை தொடங்கு வோம்" என்றார்.
இந்தப் படத்தையும் ரெட்ஜெயன்ட் மூவீஸ்தான் தயாரிக்கிறது!
Comments
Post a Comment