'ராமர்’ படத்தில் வினய் தத்தா, அனுமோல் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை சென்சார் அதிகாரிகள் சமீபத்தில் பார்த்தனர். பார்த்தவர்கள் அதிர்ச...
'ராமர்’ படத்தில் வினய் தத்தா, அனுமோல் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை சென்சார் அதிகாரிகள் சமீபத்தில் பார்த்தனர். பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், பாடல் காட்சி ஒன்றில் அதிக கவர்ச்சி இருந்ததுதான். அதே போல வன்முறை காட்சிகளும் அதிகமாக இருந்ததாம். இந்த காட்சிகள் படத்துக்கு அவசியம் என இயக்குனர் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஏ சான்றிதழ்தான் தர முடியும் என அதிகாரிகள் கூறிவிட்டனர். யூ சான்றிதழ் வேண்டும் என்று டைரக்டர் ஆதிராஜாவும், தயாரிப்பாளரும் வாதம் செய்துள்ளனர். 'குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் யூ தர முடியும்Õ என அதிகாரிகள் கூறினார். வேறு வழியில்லாமல் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்களாம். இதையடுத்து அந்த காட்சிகளை வெட்டியுள்ளனர். அதன் பின் படத்துக்கு யூ சான்றிதழ் தரப்பட்டுள்ளது.
Comments
Post a Comment