தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார் தீபாஷா. தமிழில் மிஷ்கின் இயக்கும் Ôயுத்தம...
தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார் தீபாஷா. தமிழில் மிஷ்கின் இயக்கும் Ôயுத்தம் செய்Õ படத்தில் நடிக்கிறார். பட ஷூட்டிங்கின்போது கேரவன் வேண்டும், தான் விரும்பும் காஸ்ட்யூம், மேக்அப்தான் வேண்டும் என அவர் ப¤ரச்னை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் படக்குழு அப்செட்டில் உள்ளதாம். சமீபத்தில் பெங்களூரில் இந்த பட ஷூட்டிங் நடந்தபோது, அவர் சரிவர நடிக்காமல் அதிக டேக் வாங்கியதாகவும் நேரத்தை வீணடித்ததாகவும் யூனிட்டிலிருந்து தகவல் பரவியுள்ளது.
இது பற்றி படத்தில் பணியாற்றும் டெக்னீஷியன் ஒருவர் கூறியது, Ôபட ஹீரோ சேரனுடன் சேர்ந்து சாலையில் தீபாஷா ஓடுவது போல் காட்சியை படமாக்கினோம். ஓடும்போது, தீபாஷா சுவரில் முட்டிக் கொள்வது, தரையில் விழுவது போன்ற காட்சிகளை மிஷ்கின் படமாக்கினார். அந்த காட்சிகள் சரியாக வரவில்லை. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜமாக விழ வேண்டும் என்றார். இதில் தீபாஷாவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. அதனால் கொஞ்சம் மூட் அவுட்டில் இருந்தார். மற்றபடி அவரால் எந்த பிரச்னையும் இல்லை. அவர் நடிக்கும் காட்சிகளை இப்போது சென்னையில் படமாக்கி வருகிறோம்Õ என்றார்.
Comments
Post a Comment