ஈ.எஸ்.கே பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் படம், 'வல்லக்கோட்டை'. அர்ஜுன், ஹரிப்பிரியா ஜோடி. ஒளிப்பதிவு, ஆஞ்சநே...
ஈ.எஸ்.கே பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் படம், 'வல்லக்கோட்டை'. அர்ஜுன், ஹரிப்பிரியா ஜோடி. ஒளிப்பதிவு, ஆஞ்சநேயலு. இசை, தினா. வசனம், கோபிநாத். திரைக்கதை எழுதி ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். படம் குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு ஜெயிலுக்கு சென்று வரும் அர்ஜுன், ஒருமுறை வல்லக்கோட்டைக்கு வருகிறார். அங்கு நடக்கும் சில சம்பவங்கள் அவரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அப்போது அதிரடி முடிவு எடுக்கிறார் அர்ஜுன். பிரச்னைகளை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது கதை. காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கியுள்ளேன். அர்ஜுன், சத்யன், கஞ்சா கருப்பு சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
தினா இசையில் தபூசங்கர் எழுதிய 'செம்மொழி' என்ற பாடல் காட்சியில் அர்ஜுன், ஹரிப்பிரியா நடித்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி இணைந்து இப்பாடலை பாடினர். 45 நாட்களில் ஷூட்டிங் முடிந்தது. அர்ஜுன், ஹரிப்பிரியா நடிக்கும் பாடல் காட்சிகள் மலேசியாவில் படமாகிறது. செப்டம்பரில் படம் ரிலீஸ். சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு ஜெயிலுக்கு சென்று வரும் அர்ஜுன், ஒருமுறை வல்லக்கோட்டைக்கு வருகிறார். அங்கு நடக்கும் சில சம்பவங்கள் அவரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அப்போது அதிரடி முடிவு எடுக்கிறார் அர்ஜுன். பிரச்னைகளை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது கதை. காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கியுள்ளேன். அர்ஜுன், சத்யன், கஞ்சா கருப்பு சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
Comments
Post a Comment