இலியானாவுக்கு கைகொடுத்த விஜய் படம் (3 இடியட்ஸ்)!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


தமிழில் தயாராகும் 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் விஜய் ஜோடியாக நடிக்க முயன்று வருகிறாராம் நயன். இந்த வேடத்துக்கு இலியானாவை ஏறக்குறைய ஓகே செய்து வைத்திருக்கிறார்கள் 3 இடியட்ஸ் படக் குழுவினர். டோலிவுட்டின் ஏஞ்சல்ஞ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை இலியானா. இவர் அறிமுகமானது தமிழில்தான் என்றாலும் புகழ் பெற்றது என்னவோ தெலுங்கு தேசத்தில்தான். அதற்குப் பிறகு தமிழில் இவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட். ஆனால் அம்மணி தமிழுக்கு பிடிகொடுக்காமலே இருந்தார்.
தற்போதுதான் இலியானா இறங்கி வந்திருக்கிறார். சீயான் விக்ரம் ஜோடியாக வெடி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இனி தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற கனவில் மிதந்த இலியானாவுக்கு மீண்டும் வந்தது சோதனை. வெடி திரைப்படம் ட்ராப்பாகிவிட்டது. ஆனால் ஆச்சர்யமூட்டும் விதமாக "வெடி படத்தை தயாரிக்கவிருந்த நிறுவனம், இதுவரை இலியானாவுடன் செய்து கொண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை. எனவே அந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் இலியானாவே கதாநாயகியாக நடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஷங்கரின் "3 இடியட்ஸ் படத்தில் இளைய தளபதிக்கு ஜோடியாகிறார் இலியானா என்று தெரிகிறது. வெடி புஸ்ஸானாலும் "3 இடியட்ஸ் நம்பிக்கையில் இருக்கிறார் இடுப்பழகி.

Comments

Most Recent