சாலக்குடியில் ‘தலக்கோணம்’ பட ஷூட்டிங் நடந்தபோது, பட ஹீரோ, ஹீரோயின் யானைகளிடம் சிக்கி தவித்தனர். 2 மணி நேர த்ரில் அனுபவத்துக்கு பின் அவர்க...
சாலக்குடியில் ‘தலக்கோணம்’ பட ஷூட்டிங் நடந்தபோது, பட ஹீரோ, ஹீரோயின் யானைகளிடம் சிக்கி தவித்தனர். 2 மணி நேர த்ரில் அனுபவத்துக்கு பின் அவர்கள் பத்திரமாக ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து திரும்பினர். இது பற்றி டைரக்டர் பத்மராஜ் கூறியது: சாலக்குடி நீர்வீழ்ச்சியில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது. ஹீரோ ஜிதேஷ், ஹீரோயின் ரியா நடித்த பாடல் காட்சி படமாக்கிவிட்டு புறப்பட்டோம். ஆனைமலை சாலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மாலை 4 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்திருந்தனர். ஆனால் நாங்கள் புறப்பட 5 மணிக்கு மேலாகிவிட்டது. வெளிச்சம் மங்கி இருள் சூழத் தொடங்கியது.
நான், கேமராமேன் ராமலிங்கம், ஆர்ட் டைரக்டர் ரமேஷ் ஒரு காரில் புறப்பட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். மற்றொரு காரில் ஹீரோ, ஹீரோயின் வந்தனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பாததால் தேடிச் சென்றோம். ஆனைமலை சாலையில் தூரத்தில் குட்டிகளுடன் சில யானைகள் நின்றுகொண்டிருந்தன. அதைக் கண்ட ஹீரோ, ஹீரோயின், டிரைவர் அனைவரும் பயந்து நடுங்கிவிட்டனர். 'காரில் ஹாரன் அடிக்காதீர்கள், ஹெட் லைட் போடாதீர்கள், யானை மிரண்டு தாக்கும்Õ என்று எஸ்.எம்.எஸ் அனுப்பினோம். சுமார் 2 மணிநேரம் அவர்கள் பயத்திலேயே காருக்குள் இருந்தனர். பின்னர் யானைகள் காட்டுக்குள் சென்றன. அதன் பிறகே அவர்கள் வந்தனர்.
Comments
Post a Comment