கிசு கிசு - ஹீரோயின் மீது படக்குழு கோபம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

இந்த பழம் புளிக்கும்ன்னு சினிமாவுக்கு டாட்டா காட்டிய மூன் நடிகை, திரும்பவும் நடிக்க போறாராம்... நடிக்க போறாராம்... தன்னோட புது போட்டோ ஆல்பத்தை தெரிஞ்ச இயக்குனருங்க, தயாரிப்புங்களுக்கு அனுப்பி வச்சிருக்காராம். நான் புது மூன், புதுசா வந்துருக்கேன்னு சொல்றாராம்... சொல்றாராம்...

பல இசை அமைப்பாளருங்க ரெக்கார்டிங் பண்ண மும்பை பறக்கிறாங்க. அதனால சென்னையில இருக்கிற ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள் காத்து வாங்குதாம்... காத்து வாங்குதாம்... ஆர்வக்கோளாறுல சில நடிகர் நடிகைங்க ரெக்கார்டிங் தியேட்டரை கட்டினாங்க. இப்போ அவங்கெல்லாம் கவலையில இருக்காங்களாம்... இருக்காங்களாம்...

சம்முவான நடிகை கிளாமரா போட்டோ ஷூட் நடத்தியும் சான்ஸ் வரலயாம்... வரலயாம்... கிளாமரா ஒரு பாட்டுக்கு ஆடவும் ரெடின்னு தயாரிப்புகளுக்கு தூது அனுப்பியிருக்கிறாராம¢... அனுப்பியிருக்கிறாராம்... இதைக் கேள்விப்பட்ட, அவர் ஹீரோயினா நடிச்ச பீகாக் படக்குழு உர் ஆயிடுச்சாம்... ஆயிடுச்சாம்... எங்க படம் வர்ற வரைக்கும் அந்த மாதிரியெல்லாம் நடிக்கக் கூடாதுன்னு நடிகைகிட்ட சொல்லியிருக்காங்களாம்... சொல்லியிருக்காங்களாம்...

Comments

Most Recent