நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... டைரக்டரா அறிமுகமாகி, காமெடி நடிகரானவரு கஜ இயக்குனர். படங்களை இயக்கிட்டே நடிச்சிட்டும்...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
டைரக்டரா அறிமுகமாகி, காமெடி நடிகரானவரு கஜ இயக்குனர். படங்களை இயக்கிட்டே நடிச்சிட்டும் இருந்தாரு. கடைசியா எடுத்த படங்கள் ஓடாம போச்சு. நடிப்பு சான்சும் இல்ல. இனிமே ரெட்டை குதிரல சவாரி வேணாம். ஒரு துறையில கவனம் செலுத்துங்கன்னு நெருங்கியவங்க அட்வைஸ் பண்ணினாங்களாம்... பண்ணினாங்களாம்... அதை கேட்டு நடிப்புல முழு வீச்சா குதிக்க இயக்குனர் முடிவு பண்ணியிருக்காராம். அதுக்காக வயசான தோற்றம், வில்லன் தோற்றம்னு பல கெட்அப்புல ஸ்டில்ஸ் எடுத்தாராம்... எடுத்தாராம்... தயாரிப்பு கம்பெனிகளுக்கு நேர்ல போயிட்டு அதை கொடுக்கிறாராம்... கொடுக்கிறாராம்...
மில்க் இயக்குனருக்கும் திமிரு நடிகருக்கும் ஷூட்டிங் ஸ்பாட¢ல ஏற்கெனவே மோதல் வெடிச்சது. இப்போ திரும்பவும் அதே போல நடந்துச்சாம்... நடந்துச்சாம்... டைரக்டர் வேலையில தலையிடுறாருன்னு பல படங்கள்ல நடிகர் பற்றி புகார் வந்துச்சு. இப்போ மில்க் இயக்குனர் சொன்ன வசனத்தை தன்னோட பாணியில மாத்தி சொன்னாராம்... நடிகரு மாத்தி சொன்னாராம்... இயக்குனருக்கு கோபம் வந்து நடிகரை சத்தம் போட்டாராம்... சத்தம்
போட்டாராம்...
மாட்டுக்கார நடிகரோட புது படம் பெட்டியில கிடந்துச்சு. அதை தூசு தட்டி எடுத்து, புயலோட காமெடி காட்சிகளை சேர்த்தாங்க. கூடவே கவர்ச்சி குத்துப்பாட்டையும் சேர்த்தாங்க... சேர்த்தாங்க... இருந்தாலும் நடிகருக்கு மார்க்கெட் இல்லேன்னு படத்தை வாங்க யாருமே முன்வரலயாம்... முன்வரலயாம்...
Comments
Post a Comment