'உத்தமபுத்திரன்' படத்தை முடிக்க உள்ளார் ஜெனிலியா. அடுத்து விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் நடிக்கிறார். கமர்ஷ¤யல் படங்களுக்...
'உத்தமபுத்திரன்' படத்தை முடிக்க உள்ளார் ஜெனிலியா. அடுத்து விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் நடிக்கிறார். கமர்ஷ¤யல் படங்களுக்கு இடையே சந்தோஷ் சிவன் இயக்க உள்ள விருதுக்கான படத்திலும் நடிக்க உள்ளார் ஜெனிலியா. 'உருமி' என்ற இப்படம், தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிறது. முழுக்க கேரளாவில் இதன் ஷூட்டிங் நடக்க உள்ளது. களறி சண்டையை பின்னணியாக கொண்டு இப்படம் தயாராகிறது. இதற்காக களறி சண்டையை கற்க உள்ளார் ஜெனிலியா.
'இது போன்ற ஒரு படத்தில் நடிக்கத்தான் காத்திருந்தேன். சந்தோஷ் சிவன் பெரிய டெக்னீஷியன். அவர் கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டேன். கேரளாவில் அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. உருமி என்பது களறி சண்டையில் பயன்படும் வாளின் பெயர். இப்படத்துக்காக நானும் ஹீரோவான பிருத்விராஜும் களறி கற்க உள்ளோம். பட விழாக்களுக்கு மட்டுமே போகும் படம் அல்ல இது. பொழுதுபோக்காகவும் இருக்கும்' என¢றார் ஜெனிலியா.
Comments
Post a Comment