பயமில்லை படத்தில் ஏழரை அடி வில்லன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சென்னை: சேஷசாயி பிலிம்ஸ் சார்பில் மோகன் சுப்பிரமணியம் தயாரிக்கும் திகில் படம், 'பயமில்லை'. சூரஜ், மேகனா, பிரேமலதா ஆகியோருடன் ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் மற்றும் ஏழரை அடி உயரமுள்ள லம்பா என்ற வில்லன் அறிமுகமாகின்றனர். ஒளிப்பதிவு, சுரேஷ்பாபு. இசை, அஜனீஸ் லோகநாத். வசனம், ராஜபாண்டி. படத்தை இயக்கும் மஞ்சுஸ்வராஜ் கூறுகையில், 'பாழடைந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களை திகிலூட்டும் திரைக்கதையுடன் படம் சொல்கிறது. சூரஜ் மட்டுமே பங்கேற்ற ஒரு பாடல் காட்சியை, ஸ்டெடிகம் மற்றும் ஐந்து கேமராக்கள் உதவியுடன் ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம். ரசிகர்களின் நரம்புகளை துடிக்க வைக்கும் வகையில் பின்னணி இசை அமைந்துள்ளது. அடுத்த மாதம் படம் ரிலீஸாகிறது' என்றார்.



Comments

Most Recent