சென்னை : யுனிவர்சல் புரொடக்ஷன் சார்பில் டி.ஆர்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கலவரம்'. புதுமுகங்களுடன் சத்யராஜ் நடிக்கிறார். படம் ...
சென்னை : யுனிவர்சல் புரொடக்ஷன் சார்பில் டி.ஆர்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கலவரம்'. புதுமுகங்களுடன் சத்யராஜ் நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் ரமேஷ், நிருபர்களிடம் கூறியதாவது: 'உளவுத்துறை' படத்துக்குப் பிறகு நான் இயக்கும் படம் இது. நாட்டில் நடக்கும் ஒரு கலவரம் செய்தியாகவே கடந்து விடுகிறது. பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண உதவி கொடுப்பதன் மூலம் அரசு ஒதுங்கிக் கொள்கிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு சீரழிந்து போவதை யாரும் உணர்வதில்லை. தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நிஜமாக நடந்த ஒரு கலவரம் ஏற்படுத்திய பாதிப்புதான் இந்தப் படம். சில சூழ்நிலைகள் கருதி அது எந்தக் கலவரம் என்று இப்போது கூற முடியாது. அந்த கலவரம் பற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கிறார். அஜய், குட்டி, யாசர், ராகவேந்தர் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படத்திற்கு ஹீரோயின் இல்லை. சுஜிபாலா ஒரு பாட்டுக்கு ஆடுவதோடு முக்கியமான கேரக்டரிலும் நடித்திருக்கிறார். செப்டம்பர் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு ரமேஷ் கூறினார்.
Comments
Post a Comment