ஒரே நேரத்தில் ஆறு படங்களில் நடிப்பது கஷ்டமாக உள்ளது என்கிறார் அஞ்சலி. இது பற்றி அவர் கூறியதாவது:தம்பி வெட்டோத்தி சுந்தரம், மகிழ்ச்சி, மகார...
ஒரே நேரத்தில் ஆறு படங்களில் நடிப்பது கஷ்டமாக உள்ளது என்கிறார் அஞ்சலி. இது பற்றி அவர் கூறியதாவது:தம்பி வெட்டோத்தி சுந்தரம், மகிழ்ச்சி, மகாராஜா, கருங்காலி, மலையாளத்தில் ஜெயசூர்யா ஜோடியாக ஒரு படம் உட்பட ஆறு படங்களில் நடிக்கிறேன். ஒரே நேரத்தில் இத்தனை படங்களில் நடிப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. இது எனக்கு கஷ்டமாக உள்ளது. நடித்து வரும் படங்கள¤ல் பல, முன்பே ஒத்துக்கொண்டது.
பல்வேறு கட்டத்தில் இந்த படங்களுக்காக கால்ஷீட் கொடுத்திருந்தேன். அந்த நேரத்தில் அந்த படங்கள் தொடங்கப்படவில்லை. முன்பு ஒப்புக்கொண்ட காரணத்துக்காகவே இதில் நடிக்கிறேன். கருங்காலி அந்த வகையில் முன்பே ஒப்புக்கொண்ட படம்தான். இனி புது படங்கள் எதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்த படங்களை முடித்த பின்பே புது படத்தில் நடிப்பேன். சமுத்திரக்கனி இயக்கும் பட ஷூட்டிங் டிசம்பருக்கு தள்ளிப்போயுள்ளது. அதனால் அதில் நடிப்பதில் பிரச்னை வராது.இவ்வாறு அஞ்சலி கூறினார்.
Comments
Post a Comment