இந்தி படத்தில் கவர்ச்சியாக நடிக்க த்ரிஷா டபுள் ஓகே

http://dadesifun.com/wp-content/uploads/2009/11/trisha-krishnan.jpg
இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று த்ரிஷா கூறிவுள்ளார். அக்ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்த காட்டா மீட்டா படம் இன்று வெளியானது. இதில் முழுக்க புடவை கட்டி வருகிறார். இந்தியில் குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பீர்களா என்று கேட்ட போது மறுத்தார். இதுகுறித்து த்ரிஷா கூறியதாவது, காட்டா மீட்டா படத்தில் எனக்கு மாநகராட்சி கமிஷனர் வேடம். எனவே தான் புடவையில் வந்தேன். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி உடையுடன் ஆடியுள்ளேன். இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருக்கிறேன். காட்டா மீட்டா படத்தில் விளம்பர பணிகளில் பங்கேற்க மன்மதன் அம்பு படத்தை இடையில் நிறுத்திவிட்டு மும்பை திரும்பியுள்ளேன். டி.வி. நிகழ்ச்சிகளில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து பங்கேற்கிறேன். 25ம் தேதி மீண்டும் மன்மதன் அம்பு படப்பிடிப்புக்காக செல்கிறேன் என்றார். மும்பையில் நேற்று (23.07.10) மாலை நடிகர், நடிகைகளுக்காக காட்டா மீட்டா படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் த்ரிஷாவும் பங்கேற்றார். இப்படம் மூலமாக தனக்கு மேலும் இந்திப் பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறார்.

Comments

Most Recent