வசந்தபாலனின் அரவான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'வெயில்', 'அங்காடி தெரு' படங்களை அடுத்து
வசந்தபாலன் இயக்கும் படத்துக்கு 'அரவான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை,
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். ஆதி ஹீரோ. பசுபதி முக்கிய வேடத்தில்
நடிக்கிறார். தன்ஷிகா, மலையாள நடிகை அர்ச்சனா கவி ஹீரோயின்களாக
நடிக்கின்றனர். சித்தார்த் ஒளிப்பதிவு. பின்னணி பாடகர் கார்த்திக், இசை
அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி
வசந்தபாலன் கூறும்போது, 'அரவான் என்றால் ஆண்மை பொருந்தியவன். சர்வ
லட்சணங்கள் பொருந்தியவன், இளகிய மனம் கொண்டவர் என்று பொருள். கதைக்கு இந்த
தலைப்பு பொருந்தியதால் அதை வைத்தேன். 18&ம் நூற்றாண்டின் தமிழக
வாழ்க்கையை, கலாசாரத்தை, காதலை சொல்லும் படம் இது. யதார்த்தமாக இருக்கும்.
தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

Comments

Most Recent