திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சோனா தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நானும், அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் இணைந்து தயாரிக்க...
திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சோனா தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நானும், அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் இணைந்து தயாரிக்கும் 'கனிமொழி' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாடல் வெளியீட்டு விழா, நாளை மறுநாள் நடக்கிறது. முதல்வர் கருணாநிதி பாடல்களை வெளியிடுகிறார். விஜய் பெற்றுக் கொள்கிறார். அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் சினிமாவை சேர்ந்த கஷ்டப்படும் டெக்னீஷியன்களுக்கு உதவ முடிவு செய்திருக்கிறேன்.
எனது குடும்ப ஜோதிடர் எனக்கு திருமண பாக்கியம் இல்லை என்று சொல்லிவிட்டார். எனக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ஆண்களோடு வாழவும் முடியாது. ஆண்கள் இல்லாமல் வாழவும் முடியாது என்பது என் கருத்து. பெண்களோடு என்னால் ஒத்துப்போக முடியாது. அதனால் எனக்கு ஆண் நண்பர்கள்தான் அதிகம். சினிமாவில் இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன்.
Comments
Post a Comment