யதார்த்தம் தான் இன்றைய சினிமா டிரெண்ட். இசையுலகிலும் அது நுழைந்துவிட்டது. கம்ப்யூட்டரில் பதிவு செய்த இசைகளுக்கு பதிலாக, அந்த காலத்து பாணிய...
யதார்த்தம் தான் இன்றைய சினிமா டிரெண்ட். இசையுலகிலும் அது நுழைந்துவிட்டது. கம்ப்யூட்டரில் பதிவு செய்த இசைகளுக்கு பதிலாக, அந்த காலத்து பாணியில் லைவ்வாக இசை கலைஞர்களை வரவழைத்து பதிவு செய்கின்றனர். 'கந்தா பட இசை அமைப்பாளர் சக்தி ஆர்.செல்வாவும் இது போல செய்திருக்கிறார்.'கந்தா படத்தில் துப்பாக்கி சத்தம் கேட்க வேண்டிய கிளைமாக்ஸில் வயலின் இசையை போட்டிருக்கிறேன். படத்தில் 'பத்து லாரி கட்டில் வேணுமா உடைச்சிடாம வெச்சிக்கணும் என்று நாயகி பாட, '8 லாரி தொட்டில் வேணுமா நான் தாரேன்டி பத்திரமா வச்சிக்கணும் என்று நாயகன் பதில் சொல்லும் பாடலை பதிவு செய்தேன். கட்டில், தொட்டில் சத்தங்களை சேர்ப்பதற்காக ரெக்கார்டிங் தியேட்டருக்கு சில கட்டில், தொட்டில்களை கொண்டு வந்தேன். அதை அசைத்து எழுந்த நிஜ ஒலியை பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் செல்வா.
Comments
Post a Comment