'நான் நடிகை; எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை' என்றார் அசின். சல்மான்கான் ஜோடியாக, 'ரெடி' என்ற இந்தி படத்தில் நடித்து வ...
'நான் நடிகை; எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை' என்றார் அசின். சல்மான்கான் ஜோடியாக, 'ரெடி' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் அசின். இதன் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கையில் நடக்கும் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளதால் அசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் கூறியுள்ளது. இதுபற்றி அசின் கூறியதாவது:
நான் நடிகை. ஷூட்டிங் நடத்தப்படும் இடத்தை தேர்வு செய்வது, இயக்குனரும் தயாரிப்பாளரும்தான். இதில் என் பங்கு எதுவும் இல்லை. தயாரிப்பாளருடன், நான் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். அதனால், அவர் விரும்பும் இடத்தில் ஷூட்டிங் நடந்தால் அங்கு சென்றாக வேண்டும். அதைதான் நான் செய்திருக்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டவள் நான். எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும். இவ்வாறு அசின் கூறினார்.
Comments
Post a Comment