நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... நவரச ஹீரோ எங்கேயாவது நடிகைகளை பார்த்தால் அன்பை அள்ளி பொழியிறாராம்... பொழியிறாராம்... தெ...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
நவரச ஹீரோ எங்கேயாவது நடிகைகளை பார்த்தால் அன்பை அள்ளி பொழியிறாராம்... பொழியிறாராம்... தெரியாத நடிகையா இருந்தாலும் உட்கார்ந்து மணிக்கணக்குல பேசுறாராம்... பேசுறாராம்... நடிகரு திரும்பவும் பழைய பாணிக்கு வந்துட்டாருன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...
அறிமுகப்படுத்தின பளார் டைரக்டர் படத்துக்கு கால்ஷீட் பிரச்னை பண்ண¤னாரு ஈரமான நடிகர். டைரக்டரும் கடுப்பில இருந்தாரு... இருந்தாரு... நடிகர் மேல புகாரும் சொன்னாரு. இப்போ ரெண்டு பேரும் ராசி ஆயிட்டாங்களாம்... ஆயிட்டாங்களாம்... சினிமா நண்பர்கள் சில பேரோட முயற்சியால இது நடந்துச்சாம். இப்போ எந்த மேடை கிடைச்சாலும் குரு நமஸ்காரம் செஞ்சிட்டுத்தான் நடிகரு மறுவார்த்தை பேசுறாராம்... பேசுறாராம்...
விண்ணைத்தாண்டுற படத்தை இந்தியில இயக்க மின்னலான இயக்குனர் முடிவு பண்ணியிருந்தாரு. தயாரிப்பு ஜகா வாங்கிட்டாரு.
அதனால தானே தயாரிக்க இயக்குனரு பிளான் போட்டிருக்கிறாராம்... போட்டிருக்கிறாராம்... அதுக்காக தீவிரமா பைனான்ஸ் வேட்டையை தொடங்கியிருக்கிறாராம்... தொடங்கியிருக்கிறாராம்...
Comments
Post a Comment