ஆர்.புவனேஷ் இயக்கும் படம், 'ஆறாவது வனம்'. இதில் பூஷன்குமார், வித்யா ஜோடியாக நடிக்கின்றனர். ஹீரோ பூஷன்குமார், வில்லனின் கையை அறுப்...
ஆர்.புவனேஷ் இயக்கும் படம், 'ஆறாவது வனம்'. இதில் பூஷன்குமார், வித்யா ஜோடியாக நடிக்கின்றனர். ஹீரோ பூஷன்குமார், வில்லனின் கையை அறுப்பது போன்ற காட்சிக்கு சென்சார் அதிகாரிகள் தடை விதித்தனர். ஆனால், இயக்குனரின் பெரும் விவாதத்திற்கு பிறகு அதை அனுமதித்துள்ளனர். 'கையை வெட்டும் காட்சி பயங்கரமாக இருப்பதாக, சென்சார் அதிகாரிகள் சொன்னார்கள். சமீபத்தில் வெளிவந்த பெரிய பட்ஜெட் படத்தில், ஒருவன் கையை வெட்டி அவனிடமே கொடுத்து விடுவார்கள். வெட்டுப்பட்ட கையை நசுக்கியபடியே ஹீரோ வசனம் பேசுவார்.
இதை விடவா எங்கள் படம் வன்முறையாக இருக்கிறது. அந்தப் படத்துக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா?' என்று வாதிட்டேன். பிறகு சம்மதித்தார்கள். காதலால் ஊரே காலி செய்யும் மற்றொரு காட்சியை நீக்க சொன்னார்கள். உண்மையாக நடந்த நிகழ்ச்சியை கூறி அதையும் நீக்க மறுத்துவிட்டோம். படத்தில் ஒரு நிமிட முத்தக்காட்சி இருக்கிறது. அதற்கு தடை சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். அனுமதித்தார்கள். படத்துக்கு 'யூ/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். வரும் 16&ம் தேதி வெளிவருகிறது' என்றார் இயக்குனர் ஆர்.புவனேஷ்.
Comments
Post a Comment