சென்னை: 'கிராமத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது நடிகனாகி விட்டேன்' என்றார் கணேஷ்பாபு. ம...
சென்னை: 'கிராமத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது நடிகனாகி விட்டேன்' என்றார் கணேஷ்பாபு.
மேலும் அவர் கூறியதாவது:தஞ்சை மாவட்டம் வரகூரை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். நடிப்பு ஆசையால், விவசாயத்தை விட்டு விட்டு சென்னை வந்தேன். சினிமாவில் பல வருட போராட்டத்துக்கு பிறகு இப்போதுதான் ஒரு இடம் கிடைத்துள்ளது. நாகா இயக்கிய 'ஆனந்தபுரத்து வீடு' படத்தில், ரியல் எஸ்டேட் புரோக்கர் வேடத்தில் நடித்தேன். எல்லோரும் பாராட்டுவதை கேட்டு சந்தோஷமாக இருக்கிறது. இதற்குமுன், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற 'ஒருத்தி' படத்தில் ஹீரோவாக நடித்தேன். பிறகு 'பாரதி', 'ஆட்டோகிராஃப்', 'மொழி', 'சிவகாசி' உட்பட ஏராளமான படங்களில் நடித்தேன். ஆனால், 'ஆனந்தபுரத்து வீடு' படம்தான் என்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்தியது. தொடர்ந்து காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

Comments
Post a Comment