குடும்ப பிரச்னையால் சினிமாவிலிருந்து ஒதுங்கினேன் :மல்லிகா கபூர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கடந்த ஒரு வருடமாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதற்கு காரணம் எனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை. அதனால் எனது உடல் நலனும் பாதிக்கப்பட்டது என்கிறார் மல்லிகா கபூர்.அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, புலி வருது, வாத்தியார், அந்தோணி யார்?
உள்பட பல படங்களில் நடித்தவர் மல்லிகா கபூர். இடையில் இவர் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அதைப் பற்றித்தான் இப்போது மனம் திறந்திருக்கிறார் மல்லிகா.
இப்போது நான் தெளிவாகிவிட்டேன். சொந்த பிரச்னைகளிலிருந்து விடுபட்டும் விட்டேன். எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்படும்பிரச்னைதான். அது பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. ஆரம்பத்தில் எனக்கு வழிகாட்ட யாருமே இல்லை. அதனால் பல தவறான படங்களில் நடித்தேன். தோல்வியால் துவண்டும் போனேன். இப¢போது புது மல்லிகாவாக திரும்பியுள்ளேன். சமீபத்தில் மாதவனுடன் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் நடித்தேன். சினிமா சம்பந்தமாக மாதவன் நிறைய அட்வைஸ் தந்தார். அது எல்லாம் உதவியாக இருந்தது. இப்போது மலையாளத்தில் லேடீஸ் ஒன்லி படத்தில் முகேஷ் ஜோடியாக நடிக்கிறேன். சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளேன். இனி நல்ல படங்களில் என்னை பார்க்கலாம் என்கிறார் மல்லிகா.

Comments

Most Recent