பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தார் ஹீரோயின்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மதுரை அருகே உள்ள நாட்டார்மங்களம் கிராமத்தில் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை  படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பாடல் காட்சிக்காக, அந்த கிராமத்தில் உள்ள ஆற்றின் குறுக்கே செயற்கை பாலம் அமைத்துள்ளனர். அந்த பாலத்தில் ஹீரோ தேஜும் ஹீரோயின் நட்சத்திராவும் ஆடிப்பாடும் காட்சி நேற்று முன்தினம் படமானது. ஆற்றின் கரையில் மற்ற நடன கலைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென செயற்கை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் ஆடிக்கொண்டிருந்த ஹீரோயின் நட்சத்திரா சுமார் 15 அடி உயரத்திலிருந்து ஆற்றில் விழுந்தார். மற்ற நடன கலைஞர்கள் ஆற்றில் குதித்து அவரைக் காப்பாற்றினர். பலத்த காயமடைந்த நட்சத்திராவை  மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாலம் பாதுகாப்புடன்தான் அமைக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் அது உடைந்தது துரதிஷ்டவசமானது. நல்ல வேளையாக பெரிய பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. நட்சத்திரா உடல¢ நலம் தேறி வருகிறார். இப்போது அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறோம் என்றார் இயக்குனர் ஏகாதசி.

Comments

Most Recent