'திருடா திருடி' படத்தில் அறிமுகமானவர் சாயாசிங். தற்போது, 'ஆனந்தபுரத்து வீடு' படத்தில் குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். அவர...
'திருடா திருடி' படத்தில் அறிமுகமானவர் சாயாசிங். தற்போது, 'ஆனந்தபுரத்து வீடு' படத்தில் குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். அவர் கூறியதாவது: தமிழில், 'வல்லமை தாராயோ' படத்துக்கு பிறகு 'ஆனந்தபுரத்து வீடு' வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது 5 வயது குழந்தைக்கு தாயாக நடித்தால் இமேஜ் போய்விடும் என்றார்கள். ஆனால் படத்துக்கு பாராட்டு குவியும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஹீரோவோடு ரொமான்டிக் செய்து கொண்டு டூயட் பாடிதான் நடிக்க வேண்டும் என்பதில்லை. இதுபோன்ற நல்ல கேரக்டர்களிலும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். தற்போது பெங்காலி படம் ஒன்றில் நடித்து வருகிறேன். கஷ்டப்படும் ஒரு கூட்டுக் குடும்பத்திற்கு மருமகளாக செல்லும் நான், அந்தக் குடும்பத்தை எப்படி மாற்றுகிறேன் என்பது கதை. என்னை சுற்றி நடக்கும் கதை என்பதால் மன நிறைவோடு நடித்து வருகிறேன்.
இவ்வாறு சாயாசிங் கூறினார்.
இவ்வாறு சாயாசிங் கூறினார்.
Comments
Post a Comment